அண்டை நாடுகளுக்கிடையே சுவர் எழுப்புவது சரியா?

அண்டை நாடுகளுக்கிடையே சுவர் எழுப்புவது சரியா?

அமெரிக்க அரசு 1995ம் ஆண்டு 21 நாட்கள் முடக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்க அரசு 20 நாட்களாக முடக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் 5.6 பில்லியன் செலவில் அமெரிக்காவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையே சுவர் எழுப்ப நினைக்கிறார். இதற்காக அமெரிக்க காங்கிரஸிடம் நிதி ஒதுக்கக் கோரியிருந்தார். ஜனநாயக கட்சி எதனை எதிர்த்தது. மக்களின் வரிப்பணத்தை இவ்வாறு வீணாக்கக் கூடாது என்றது. நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசு முடக்க்கம் உண்டாது.

மெக்ஸிகோவில் இருந்து ஆயிரக்கணக்கான சட்டவிரோத அமெரிக்க குடியேறிகள் கஞ்சா, ஹெராயின் ஆகியவற்றை கடத்தி வருகின்றனர். இது அங்கு வாடிக்கையாகி விட்டது. இதனால் அமெரிக்காவில் போதை பொருள் புழக்கம் அதிகமாகி வருகிறது.

இதனைத் தடுக்கவே சுவர் எழுப்பவேண்டும் என டிரம்ப் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த டிச.,26 அன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் ரோனில் சிங் மெக்ஸிகோவைச் சேர்ந்த சட்டவிரோதமாக குடியேற முயன்ற நபர் ஒருவரால் கொல்லப்பட்டார்.

33 வயதான ரோனில் ஃபிஜி தீவைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர். கிறிஸ்துமஸ் அன்று இவர் காலமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவருக்கு ரெஜ்ஜி சிங் என்ற அண்ணன் ஒருவர் உள்ளார். தன் தம்பிக்கும் அவரது குடும்பத்துக்கும் நேர்ந்த சோகம் வேறு எவருக்கும் நிகழக் கூடாது என டெக்ஸாசில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்பிடம் தெரிவித்தார். டிரம்ப் அவருக்கு ஆறுதல் கூறினார். டிரம்ப் சுவர் உருவாக்க நினைப்பதை வரவேற்றுள்ளார் ரெஜ்ஜி.

மேலும் சுவர் எழுப்புவது தொடர்பான வட்ட மேஜை மாநாட்டில் டிரம்ப் கலந்துகொண்டார். மேலும் அமெரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு இடையே சுவர் எழுப்புவது சரி என்றால் இதேபோல இந்தியா, பாகிஸ்தான், அஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிடையே சுவர் எழுப்புவது சரியாக வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுவர் எழுப்புவதால் சட்டவிரோத ஊடுருவல்கள் மற்றும் தீவிரவாதத்தைத் தவிர்க்கலாம் என்பது டிரம்பின் கருத்து. இதற்கு மற்ற நாடுகள் உடன்படுமா என பொருத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.