“அனிஷாவும், நானும் காதலிக்கிறோம்”.. வருங்கால மனைவி பற்றி முதன்முறையாக மனம் திறந்த விஷால்!

“அனிஷாவும், நானும் காதலிக்கிறோம்”.. வருங்கால மனைவி பற்றி முதன்முறையாக மனம் திறந்த விஷால்!

“அனிஷாவும், நானும் காதலிக்கிறோம்”.. வருங்கால மனைவி பற்றி முதன்முறையாக மனம் திறந்த விஷால்!

|

வருங்கால மனைவி பற்றி முதன்முறையாக மனம் திறந்த விஷால்!- வீடியோ

சென்னை: ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள விருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், திரைப்பட தயாரிப்பாளர் எனப் பல முக்கிய பொறுப்பில் உள்ள நடிகர் விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்தது பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என முன்பே கூறியிருந்தார்.

விரைவில் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடிவடைய இருக்கின்றன. எனவே, அவரது திருமணம் பற்றிய பேச்சும் அதிகரித்துள்ளது. அவர் தனது நீண்டகாலத் தோழியான வரலட்சுமியைத் தான் திருமணம் செய்து கொள்வார் என பல்வேறு தகவல்கள் வெளியாயின. ஆனால், அதனை அவர்கள் இருவருமே மறுத்து வந்தனர்.

2018ம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த நாயகி

நல்ல சேதி:

நல்ல சேதி:

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பேட்டியொன்றில் விஷாலுக்கு ஆந்திரப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து வைக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார் விஷாலின் அப்பா. இது பற்றி விஷாலிடம் கேட்கப்பட்டபோது, அவர் 10ம் தேதி நல்ல செய்தி கூறுவதாகத் தெரிவித்திருந்தார்.

காதலிப்பது உண்மை தான்:

காதலிப்பது உண்மை தான்:

இந்நிலையில், தனது காதலியும், வருங்கால மனைவியுமான அனிஷா பற்றி ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர்,‘ எனக்கும், அனிஷா ரெட்டிக்கும், திருமண தகவல் உண்மை தான். இது காதல் திருமணம். நாளை தான் இருவரின் பெற்றோரும் சந்தித்து பேசுகின்றனர். அதற்கு பின் தான் நிச்சயதார்த்தம், திருமண தேதி முடிவு செய்யப்படும்.

பார்த்ததும் காதல்:

பார்த்ததும் காதல்:

அனிஷா ரெட்டியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். பார்த்ததும் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. திருமணத்துக்கு தயாராகிவிட்டேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின் தான் திருமணம் அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். திருமணம் சென்னையில் தான் நடக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் மகள்:

விஷால் திருமணம் செய்து கொள்ள இருக்கிற அனிஷா, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது தந்தை விஜய் ரெட்டி ஒரு தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், விஷாலின் திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருவதால், அது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தன் டிவிட்டர் பக்கத்தில் விஷால் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.