அமெரிக்கவில் அதிபர் ட்ரம்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

அமெரிக்கவில் அதிபர் ட்ரம்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

அமெரிக்கவில் அதிபர் ட்ரம்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புக்கு வழிவகை செய்யும் வகையிலும் எல்லை சுவர் எழுப்ப அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். 

Reuters photo

அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புக்கு வழிவகை செய்யும் வகையிலும் எல்லை சுவர் எழுப்ப அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். 

இதற்காக $500 கோடி நிதி ஒதுக்கக் கோரினார். ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் செவி சாய்க்கவில்லை. 

இதனையடுத்து அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தொடங்கிய Shutdown  கடந்த 3 வாரமாக தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியமின்றிப் பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் கடந்த புதன் அன்று மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவது தொடர்பாக ஜனநாயகக் கட்சியினருடன் ட்ரம்ப் பேச்சு வார்த்தை  நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மெக்சிகோ எல்லை சுவர் எழுப்புவதற்கு தேவையான நிரியைப்பெற ஒரு வழி அவசர நிலையிப் பிரகடனப்படுத்துவது தான் என அதிரபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தற்போது அமெரிக்காவலில் நடைமுறையில் உள்ள Shutdown-னை உடனடியாக பின்வாங்க வேண்டும் என மக்கள் அமெரிக்கா வெள்ளை மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.