அமேசான் உரிமையாளர் மனைவியை பிரிந்தார்

அமேசான் உரிமையாளர் மனைவியை பிரிந்தார்

நியூயார்க்: உலகின் பெரும் பணக்காரர்கள் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 54) இவருடைய மனைவி மெக்கென்சி (48). இவர் நாவலாசிரியர் ஆவார். இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. 3 ஆண் குழந்தைகள் உள்ளன. மேலும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த தகவலை அவர்கள் இருவரும் நேற்று டுவிட்டரில் தெரிவித்தனர்.“நீண்ட கால காதல் வாழ்க்கைக்குப் பிறகு, சோதனை முறையில் பிரிந்து வாழ்ந்த பிறகு, நாங்கள் விவாகரத்து செய்துகொண்டு, நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.