இன்று: சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இன்று: சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!


  நேற்று சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இதே போல் சியோமி மி ஏ2,
  ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்கனவே விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  இன்று: சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

  32ஜிபி மெமரி கொன்ட சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை 8,999-ஆக இருந்தது, தற்சமயம்  விலைகுறைக்கப்பட்டு ரூ 7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

  64ஜிபி மெமரி கொன்ட சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை 10,499-ஆக இருந்தது, தற்சமயம்  விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

  சியோமி ரெட்மி 6:

  சியோமி ரெட்மி 6:

  சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720×1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

  மீடியாடெக்:

  மீடியாடெக்:

  சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

  சேமிப்பு:

  சேமிப்பு:

  இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கருப்பு, தங்கம், ரோஸ் கோல்டு, நீலம் போன்ற நிறங்களில் ரெட்மி 6 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

  கேமரா:

  கேமரா:

  ரெட்மி 6 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, குறிப்பாக 5எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம் போன்ற அம்சங்களுக்கு மிக அருமையாக இருக்கும் ரெட்மி 6 ஸ்மார்ட்போன்.

  பேட்டரி:

  பேட்டரி:

  சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

  English summary
  Xiaomi Redmi 6 price slashed in India now starts at Rs 7999: Read more about this in Tamil GizBot

  Leave a Comment

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.