உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள் : பேட்ட ரஜினி மகிழ்ச்சி

உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள் : பேட்ட ரஜினி மகிழ்ச்சி

உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள் : பேட்ட ரஜினி மகிழ்ச்சி 11 ஜன, 2019 – 10:28 IST ரஜினி நடித்த பேட்ட படம் வெளியாகி உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ஓய்வுக்காக குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு சென்றார் ரஜினி. அங்கு தன் குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழித்த ரஜினி, நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:முதலில் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பேட்ட படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று சொன்னார்கள். மிகவும் சந்தோஷம். ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதுதானே நம்ம வேலை, இந்த படத்தோட பெருமையெல்லாம் கார்த்திக் சுப்புராஜுக்கும், அவரோட குழுவுக்கும் தான் போய் சேரும். ஒவ்வொரு காட்சியிலும் என்னை உசுப்பேற்றி உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.