சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!


  இந்திய சந்தையில் சியோமி, ரியல்மி, விவோ, ஐபோன் போன்ற பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது, தற்சமயம் சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

  அதன்படி 3ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு 4ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு
  ரூ.11,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பை மும்பையை சேர்ந்த மகேஷ் டெலிகாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  திரைவிகிதம்:

  திரைவிகிதம்:

  சாம்சங் கேலக்ஸி ஜே6 பொதுவாக 5.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720×1480 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

  எக்ஸிநோஸ்:

  கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

  சேமிப்பு:

  சேமிப்பு:

  இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பு பொருத்தவரை 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது,
  அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆப் மற்றும் வீடியோ கால் வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கேமரா:

  கேமரா:

  இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

  இணைப்பு ஆதரவுகள்:

  இணைப்பு ஆதரவுகள்:

  வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

  English summary
  Samsung Galaxy J6 price slashed again, now starts at Rs 10490: Read more about this in Tamil GizBot

  Leave a Comment

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.