சிஇஎஸ் 2019: அசத்தலான சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் அறிமுகம்.!

சிஇஎஸ் 2019: அசத்தலான சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் அறிமுகம்.!


  அமெரிக்காவில் நடைபெறும் சிஇஎஸ் 2019-நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் தனது லேப்டாப், டெஸ்க்டாப், கணினி மானிட்டர், நோட்புக் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் நேற்று நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் மாடலை
  அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.

  சிஇஎஸ் 2019: அசத்தலான சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் அறிமுகம்.

  குறிப்பாக ஆன்லைன் கேம் செயலிகளுக்கு என்றே இந்த லேப்டாப் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2.4கிலோ எடை மற்றும் மெட்டல் வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப்
  மாடல். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

  டிஸ்பிளே:

  டிஸ்பிளே:

  இந்த லேப்டாப் மாடல் 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே பெசல்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 144ஹெர்ட்ஸ்
  பெசல்ஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

  மென்பொருள்:

  மென்பொருள்:

  8 வது தலைமுறை ஹெக்சா-கோர் ஐ7 செயலி மற்றும் உயர் இறுதியில் என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 20-தொடர் ஜிபியு சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி என்விஎம்இ உள்ளடக்க மெமரி, 1டிபி ஹார்டுடிஸ்க்
  ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்து.

  கேமிங் பேக்லைட்

  கேமிங் பேக்லைட்

  செயற்கை நுண்ணறிவு அம்சம் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது, பின்பு கேமிங் பேக்லைட் அம்சம் மற்றும் கேமிங் லைட்டிங் வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள இதனுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  இணைப்பு ஆதரவுகள்-பேட்டரி:

  இணைப்பு ஆதரவுகள்-பேட்டரி:

  சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் மாடலில் 54-வாட் பேட்டரி ஆதரவு உள்ளது, பின்பு ஸ்டிரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி கொண்டு இந்த அசத்தலான பேட்டரி வெளிவந்துள்ளது. குறிப்பாக வைஃபை 802,
  யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஆர்ஜே-45 போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு இந்த சாதனத்தின் விலைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

  English summary
  CES 2019: Samsung Notebook Odyssey Gaming laptop with 144Hz display announced: Read more about this in Tamil GizBot

  Leave a Comment

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.