பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது.  இன்று தொடங்கி இருநாள்கள் இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொடங்கி வைக்கவுள்ளார். 

இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நிறைவுரையாற்றுகிறார். அன்றைய தினத்தில், மக்களவை பொதுத் தேர்தலை சந்திப்பது தொடர்பான திட்டத்தை கட்சி வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தேசிய கவுன்சில் குழுக் கூட்டத்தில் விவசாயிகள் நலத் திட்டங்கள், ஏழைகள் நலத் திட்டங்கள் குறித்தும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.