மாடல் அழகி பாலியல் பலாத்கார விவகாரம் : கிறிஸ்டியானோ ரொனால்டோ டி.என்.ஏ சோதனைக்கு  உத்தரவு

மாடல் அழகி பாலியல் பலாத்கார விவகாரம் : கிறிஸ்டியானோ ரொனால்டோ டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவு

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, மாடல் அழகியும் முன்னாள் ஆசிரியையுமான காத்ரின் மேயோர்கா தகவல் ஒன்றினை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியினை கிளப்பியிருந்தார்.

ஆனால் 33 வயதான ரொனால்டோ, இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு தான் குற்றமற்றவர், தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்க அந்த பெண் இவ்வாறு செய்வதாக தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக லாஸ் வேகாஸ்போலீசார் ரொனால்டோவிற்கு எதிராக செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தை கூட நாட தயார் என மேயோர்கா வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், இதனை வெளியில் தெரியாமல் மறைப்பதற்காகஒரு கணிசமான தொகை  தனக்கு வழங்கினார் எனவும் மேயோர்கா குற்றம் சுமத்தினர். று
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அக்டோபர் மாத துவக்கம் வரை மவுனம் காத்துவந்த ரொனால்டோ, ட்விட்டர் வாயிலாக தன்னுடைய மவுனத்தை கலைத்தார். அதில், ‘எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதியாக நிராகரிக்கிறேன். கற்பழிப்பு என்பது ஒரு அருவருப்பான குற்றமாகும், அது எல்லாவற்றிற்கும் விரோதமானது என்று நான் நம்புகிறேன்’ என பதிவிட்டிருந்தார்.இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், லாஸ் வேகாஸ் அதிகாரிகள், இளம்பெண்ணின் உள்ளாடையில் இருப்பது ரொனால்டோவின் டி.என்.ஏ-வுடன் ஒத்துப்போகிறாதா என்பதை பார்க்க சோதனைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.