மோடியின் மனதில் பயப்புயல் வீசுகிறது – ராகுல் காந்தி

மோடியின் மனதில் பயப்புயல் வீசுகிறது – ராகுல் காந்தி

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை இரண்டு முறை நீக்கிய பிரதமர் மோடியின் மனதில் பயப்புயல் வீசுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”மோடியின் மனதில் இப்போது பயப்புயல் வீசிக்கொண்டிருக்கிறது. அவரால் தூங்க முடியாது. இந்திய விமானத் துறையில் இருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயைத் திருடி, அனில் அம்பானிக்குக் கொடுத்துவிட்டார்.

சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை இரண்டு முறை நீக்கி இருக்கிறார். இது மோடி தன்னுடைய பொய்களிலேயே சிக்கிக்கொண்டிருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. சத்யமேவ ஜெயதே!” என்று தெரிவித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.