அனைத்து கார்டுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு  வழங்க  ஐகோர்ட் அனுமதி

அனைத்து கார்டுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு  வழங்க  ஐகோர்ட் அனுமதி

சென்னை : அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை அடுத்து, வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கக் கூடாது என ஐகோர்ட் தடை விதித்தது. 

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளித்துள்ளது.
நீதிபதிகள் கூறுகையில், இலவச திட்டங்களை பயன்படுத்தும் போது பயனாளிகளை வரையறை செய்ய வேண்டும். ஓட்டுக்காக மட்டுமே ரூ.1000 பொங்கல் பரிசு வழங்குவதாக மக்கள் கருதுகிறார்கள். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.