சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 இணைப்பு பேருந்துகள்!

சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 இணைப்பு பேருந்துகள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக இருக்கும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 250 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து 11ம் தேதி முதல் வரும் 14ம் தேதி வரை இயக்கப்படவுள்ள 14,263 பேருந்துகளில் 11ம் தேதி 3,529 பேருந்துகளும், 12ம் தேதி 3,741 பேருந்துகளும், 13ம் தேதி 3411, 14ம் தேதி 3582 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதே போன்று பல்வேறு மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆனால், சென்னை கோயம்பேடு பகுதியிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டால் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையில், மாதவரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூவிருந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் கேகேநகர் பேருந்து நிலையம் ஆகியவற்றிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

New bus

இந்த நிலையில், வெளியூர் செல்லும் பொதுமக்கள் கேகே நகர், கோயம்பேடு, பூவிருந்தமல்லி ஆகிய பேருந்து நிலையங்களுக்கு சென்று வர பயனுள்ளதாக இருக்கும் வகையில், மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் நேற்று தொடங்கி வரும் 14ம் தேதி இயக்கப்படுகிறது.

24 மணி நேரமும் இயங்கும் இந்த இணைப்பு பேருந்துகள் அல்லது வேறு ஏதேனும் பேருந்து நிலையங்கள் அல்லது பேருந்துகள் குறித்து கருத்துக்கள் அல்லது புகார்கள் இருந்தால் கட்டணமில்லா தொலைபேசி சேவை எண் 18004256151 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.