கஞ்சா சாக்லெட் கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்!

கஞ்சா சாக்லெட் கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்!

சென்னை: கஞ்சா சாக்லெட் கொடுத்து மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூர் ரெட்டிபாளையத்தை சேர்ந்த 16 வயது மாணவி சுவேதா. அதே பகுதியில் பிளஸ் 1 படிக்கும் பரத் என்பவருடன் மாணவி நட்பாக பழகியுள்ளார். கடந்த 10ம் தேதி மாணவி பள்ளிக்கு சென்று வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பரத், அவரை இயற்கை காட்சிகள் நிறைந்த இடத்துக்கு அழைத்து செல்வதாக ஆசை வார்த்தை காட்டி பைக்கில் ஏற்றிக்கொண்டு தைலமர தோப்பிற்கு சென்றுள்ளார். பின் மாணவிக்கு தெரியாமல் கஞ்சா கலந்த சாக்லெட்டை சாப்பிட கொடுத்துள்ளார்.

அதை சாப்பிட்ட மாணவி, மயங்கிவிழுந்துள்ளார். தொடர்ந்து பரத்தும் கஞ்சா கலந்த சாக்லெட்டை சாப்பிட்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 2 மணி நேரத்துக்கு பின் பரத் மயக்கம் தெளிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதற்கிடையில் பள்ளிக்கு சென்ற மகள் வீட்டுக்கு வராததால் பெற்றோர் அவரின் நண்பர்களிடம் விசாரித்துள்ளனர். அதில் அவர் பரத்துடன் பைக்கில் சென்றது தெரியவந்துள்ளது. பரத்தை விசாரித்தபோது நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

உடனே அவர்கள் சென்று பார்த்த போது அங்கு மாணவி ஆடைகள் இல்லாமல் அலங்கோலமாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், உறவினர் பரத்தை சரமாரியாக தாக்கினர். பின் மாணவி சுவேதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

Rape

இந்த சம்பவம் தொடர்பாக பரத் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பரத்தை தாக்கிய 4 பேரை கைது செய்தனர். மாணவியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் பரத் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.