ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்.. 12 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்.. 12 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்.. 12 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

|

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் தனது காரை ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற கான்வாய் கார் மீது மோதச் செய்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளார்.

மோதலுக்கு உள்ளானது, மொத்தம் 55 இருக்கைகளை கொண்ட ரிசர்வ் போலீஸ் படையின் பஸ் இதுவாகும். இதில் 12 வீரர்கள் மரணமடைந்துள்ளதாகவும், பலரும் படுகாயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது. சமீபகாலத்தில் காஷ்மீரில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.