நட்சத்திரங்கள் அடங்கிய அணிக்கு எதிராக 95 ரன்கள் முன்னிலை பெற்ற விதர்பா!

நட்சத்திரங்கள் அடங்கிய அணிக்கு எதிராக 95 ரன்கள் முன்னிலை பெற்ற விதர்பா!

 

5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் என்கிற நிலையிலிருந்து முதல் இன்னிங்ஸில் 425 ரன்கள் எடுத்து 95 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது விதர்பா அணி. உண்மையிலேயே இது ஆச்சர்யமான விஷயம்.

விதர்பா அணியில் உமேஷ் யாதவ், வாசிம் ஜாஃபர் இல்லை. ஆனால் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவில் மயங்க் அகர்வால், விஹாரி, ரஹானே, ஸ்ரேயஸ் ஐயர் என சர்வதேச வீரர்கள் உள்ளார்கள். எனினும் முதல் இன்னிங்ஸில் விதர்பா அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

2-ம் நாள் முடிவில் விதர்பா அணி 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்திருந்தது. வாட்கர் 50, கர்னேவார் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இன்று இந்த ஜோடி மேலும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தது. அணியின் ஸ்கோர் 300 ரன்கள் தாண்டிய பிறகு 73 ரன்களில் வாட்கர் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பரான கர்னேவார் சதமடித்து அசத்தினார். அவர் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்கள் பக்குவமாக விளையாடி மேலும் ரன்கள் சேர்த்ததால் விதர்பா அணி, முதல் இன்னிங்ஸில் 142.1 ஓவர்கள் விளையாடி 425 ரன்கள் எடுத்தது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 95 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.