நாளை: ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்.!

நாளை: ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்.!


  இந்திய சந்தையில் நாளை மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நாளை: ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி7 பவர்.!

  4ஜிபி ரேம் கொண்ட மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு டெலிகாம் நிறுவனங்கள் மூலம் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு டேட்டா சலுகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த  ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

  டிஸ்பிளே:

  டிஸ்பிளே:

  மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 720×1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  சிப்செட்:

  சிப்செட்:

  இந்த ஸ்மார்ட்போன் மாடல் 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை
  அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். பின்பு இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கு ஜி7 பவர்
  ஸ்மார்ட்போன்.

  சேமிப்பு

  சேமிப்பு

  மோட்டோ ஜி7 பவர் சாதனம் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 12எம்பி டூயல்
  ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

  பேட்டரி:

  பேட்டரி:

  இக்கருவி 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், மேலும் வைஃபை,என்எப்சி, யுஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Moto G7 Power with 4GB RAM coming to India for Rs 13,999 tomorrow: Read more about this in Tamil GizBot

  Leave a Comment

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.