மலையக பெருந்தோட்ட தொழில் துறையை அழியாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தேயிலைத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்பாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போது, தேயிலைத்துறை சார்ந்த குறுங்கால மற்றும் நெடுங்கால பிரச்சனைகளை கண்டறிவதற்கு ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தார்.
ஜனாதிபதியுடனான இந்த கலந்துரையாடலில் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த போதே முத்தையா முரளிதரன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை மாத்திரமல்லாது, அவர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். குறிப்பாக பெருந்தோட்ட தொழில் துறையை அழியாது பாதுகாக்க வேண்டும். பெருந்தோட்ட தொழிலின் மூலம் நாட்டின் ஏற்றுமதியையும் அதிகரிக்க முடியும்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.