முகமது ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முகமது ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மனைவியிடம் வரதட்சினை கேட்டு துன்புறுத்தியது, மானபங்கப்படுத்தியது தொடர்பாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது கொல்கத்தா போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
ஷமியின் மனைவி ஹாஸின் ஜஹான் சமூகவலை தளம் மூலம் அவர் மீது பல்வேறு புகார்களை சுமத்தி இருந்தார். மேலும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் ஷமி மீது கொல்கத்தா போலீஸிடம் புகார் செய்தார். தன் மீதான புகார்களை ஷமி ஏற்கெனவே மறுத்திருந்தார்.
இந்நிலையில் இந்திய தண்டனை சட்டம் 498ஏ, 354ஏ பிரிவுகளின் கீழ் அலிப்பூர் நீதிமன்றத்தில் ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரும் 2019 ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பைக்கான அணியில் ஷமி கண்டிப்பாக இடம்பெறுவார் என்ற நிலையில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.