''காவல்துறை யாரைக் காப்பாற்ற நினைக்கிறது?'' – வெடிக்கும் பொள்ளாச்சி விவகாரம்

பொள்ளாச்சியைச் சேர்ந்த கும்பல் ஒன்று அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்களை ஏமாற்றிச் சீரழித்து ஆபாசப்படம் எடுத்ததாக பிப்ரவரி 24-ம் தேதி பொள்ளாச்சி கல்லூரி மாணவி ஒருவர் புகார் கொடுத்தார் இந்தப் புகாரின் அடிப்படையில் சபரிராஜன் திருநாவுக்கரசு சதீஷ் வசந்தகுமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் இந்தப் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்டார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் அரசியல்வாதிகளின் பின்புலம் இருப்பதாகத் தெரியவர அதனால்தான் போலீஸார் `இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிரம் காட்டவில்லை’ என்ற குற்றச்சாட்டும் எழுந்தது இதையடுத்து புகார் கொடுத்த பெண் குறித்த தகவல்களை வெளியிட்டது காவல்துறைதற்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை பேரும் தண்டிக்கப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது நாளுக்கு நாள் கேள்விக்குறியாகிவரும் நிலையில் பெண் தலைவர்கள் பலரும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்கனிமொழி திமுக 39பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது இந்தக் கூட்டத்தையும் இதில் சம்பந்தப்பட்டவர்களையும் அரசு காப்பாற்ற நினைக்கிறது ஆளும் கட்சிக்குத் தொடர்புடையவர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனச் சொல்கிறார்கள் புகார் கொடுத்த பெண்ணின் அடையாளம் காப்பாற்றப்படாமல் பொது வெளியில் சொல்கிறது காவல்துறை இனி எப்படிக் காவல்துறையை நம்பி புகார் கொடுக்க வருவார்கள் சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி உடனடியாகக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கட்சி பாகுபாடின்றி தண்டிக்கப்பட வேண்டும் அதற்காகத்தான் திமுக மகளிரணி சார்பில் பொள்ளாச்சியில் ஒரு போராட்டத்தை நடத்த இருக்கிறோம் இதுபோன்ற இழிவான செயலில் ஈடுபடும் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் அரசும் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும்’தமிழிசை பாஜக 39பொள்ளாச்சியின் அதிர்வு அதிர்ச்சிடையச் செய்கிறது குற்றவாளிகள் தயவு தாட்சண்யமில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும் பிறக்காத பெண் சிசுகூடக் கலைக்கப்படக் கூடாது என்றிருக்கும் என் தேசத்தில் எங்கள் பெண்குழந்தைகளின் தேகங்கள் சிதைக்கப்படும்போது எப்படித் தாங்குவது எரிமலையாய் வெடிப்போம்அதேநேரத்தில் எங்கள் பெண் குழந்தைகளின் ஓலத்தை அரசியலாக்காதீர்கள் போராட்டங்களைவிட போராட்டமான அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுப்போம் இளந்தளிர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க மருத்துவ ரீதியாகவும் மன ரீதியாகவும் அந்தக் கொடுஞ்சம்பவங்களின் மனநிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் அதேநேரத்தில் கொத்த வந்தால் கழுகுகளாக மாறிக் குத்திக் குதறுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுவது என் வேலை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் தயவுதாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டும்39ஜோதிமணி காங்கிரஸ் `பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு நெஞ்சம் பதறுகிறது இதுதொடர்பாக வெளியான வீடியோவைப் பார்த்து குலைநடுங்கியது பெண்களை இப்படிச் சீரழித்த அத்தனை பேருமே 20 வயதிலிருந்து 25 வயதுக்குள்தான் இருக்கிறார்கள் இதுபோன்று சமூக வலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்தி பெண்களை மிரட்டும் போக்கு கொங்கு மண்டலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதற்குப் பின்னால் ஒரு கும்பல் இருக்கும் என நினைக்கிறேன் சாதாரணமாக யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்   இளைஞர்களை மூளைச்சலவை செய்து இந்தக் காரியங்களில் ஈடுபடுத்துவதற்கு ஒரு கும்பல் இருக்கிறது அவர்களுக்குக் காவல்துறையும் அரசும் உடந்தையாக இருப்பதாகவே இந்தச் சம்பவம் எடுத்துரைக்கிறது மேலும் காவல்துறை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இந்தச் சம்பவத்துக்கும் ஆளும்கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறது விசாரணையே இன்னும் முடியவில்லை அதற்குள் எதற்கு ஆளும்கட்சிக்கு ஆதரவாகக் காவல்துறை செயல்பட வேண்டும் இனியும் யாரும் புகாரளிக்க வரக்கூடாது என்பதற்காகத்தான் தற்போது புகாரளித்தவர்களின் தகவல்களை வெளியிட்டிருக்கிறது காவல்துறை இது வெறும் நான்கு பேர் சம்பந்தப்பட்ட விஷயமல்ல ஆளும் கட்சியின் பின்புலம் இல்லாமல் யாரும் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட முடியாது’ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.