சென்னையில் ராஜஸ்தான் பாரம்பரிய உணவு திருவிழா

சென்னை, மார்ச். 15–

சென்னை கிண்டி, சர்தார் படேல் சாலையில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலான ரமடா பிளாசாவில் ராஜஸ்தான் பாரம்பரிய உணவு திரவிழா இன்று தொடங்கி 25ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து உணவு வகைகளும் அங்குள்ள சமையல் கலைஞர்களைக் கொண்டு சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு அதன் சுவைக்கேற்ப பரிமாற ஏற்பாடு செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ரமடா பிளாசாவைச் சேர்ந்த தலைமை உணவு தயாரிப்பாளர் வீரேந்திர ஜோஷி, ஹனீப் சாகேப் தலைமையில் மற்ற உணவு தயாரிப்பாளர்களோடும் இணைந்து ராஜஸ்தான் பரம்பரிய உணவு வகைகளை தயார் செய்கிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஓவிய பதாகைகள், ஓவியங்கள், மாநில உடையணிந்து உணவு பரிமாறுபவர்கள், மாநில இசை வழங்குபவர்கள் உள்ளிட்ட அனைத்தும் மாநிலத்தில் உள்ளது போன்று உள்ளது. இனிப்பு வகைகள், ரொட்டி, நான், கார வகைகள், பால், குளிர்பானங்கள், பல்வேறு வகை பாரம்பரிய உணவு வகைகள் அனைத்தும் பரிமாறப்படுகிறது.

சுகதாரமான சூழ்நிலையில் சமையல் அறை, உணவு பரிமாறும் முறை அனைத்தும் சிறப்பாக உள்ளது. வழக்கமான முறையில் இல்லாமல் ராஜஸ்தான் தான் பாரம்பரிய உணவு திருவிழா. சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. உணவக மேலாளர்கள், சந்தீப்பட்நாகர், ஹரி, புனித், நல்லவன் ஆகியோர் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.