பிளக்ஸ் அடித்தவர்கள் வரை சிக்க வாய்ப்பு..? 1 நாளுக்கு மேல் அனுமதி இல்லை – உடனடியாக பறக்கும்…

பிளக்ஸ் அடித்தவர்கள் வரை சிக்க வாய்ப்பு..? 1 நாளுக்கு மேல் அனுமதி இல்லை – உடனடியாக பறக்கும்…

பிரிண்டிங் பிளக்ஸ் உரிமையாளர்களுக்கான தேர்தல் விதிமுறைகள் விளக்க கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

பிரிண்டிங் பிளக்ஸ் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்த விளக்க கூட்டம் திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் வருவாய் கோட்டாட்சியர் செண்பகவள்ளி, வடக்கு வட்டாட்சியர் ஜெயக்குமார் மற்றும் பிரிண்டிங் பிளக்ஸ் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளார்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாச்சியர் செண்பகவள்ளி தலைமை வகித்து பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் கடந்த ஞாயிறன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் பிரிண்டிங் பிளக்ஸ் உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் அடிக்கும் பிளக்ஸ் போர்டுகளில் மதம் சார்ந்த, ஜாதிகள் குறித்த வாசகங்கள் இருக்ககூடாது.

தாங்கள் அடிக்கும் பிளக்ஸ்களில் தங்கள் நிறுவனங்களின் தொகைபேசி எண்களை கட்டாயம் அச்சடிக்க வேண்டும். எந்த கட்சியினர் பிளக்ஸ்அடிக்கிறார்களே அவர்களின் தொலைபேசி எண்ணை முறையாக வாங்கி அதனைபராமரிக்க வேண்டும்.

மேலும் திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுபவர்கள் அரசியல் கட்சி பிரமுகரின் திருமணத்திற்கு மட்டும் வாடகைக்குவிட வேண்டும். அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்க கூடாது.

மேலும் திருமணங்களில் கட்சிகளின்சார்பில் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களுக்கு 1 நாளுக்கு மேல் வைக்க அனுமதி இல்லை.

பதிவு செய்யப்படும்நபர்களின் எண்களை வருவாய் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம்வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்செய்யப்படுவதை தடுக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.