பொள்ளாச்சியில் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் விசாரணை.! கைப்பற்ற பொருட்கள்.,…

பொள்ளாச்சியில் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் விசாரணை.! கைப்பற்ற பொருட்கள்.,…

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

இந்த விஷயம் தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும்., அவர்களிடம் இருந்த காணொளி காட்சிகளில் மூன்று பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மேலும்., திருநாவுக்கரசு கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்தே தன்னிடம் பயிலும் மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து ஆபாச படம் எடுத்ததும்., மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையானது நேற்று முன்தினம் முதலாக சி.பி.சி.ஐ.டி விசாரணை துவங்கியுள்ள நிலையில்., சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் திருநாவுக்கரசின் பண்ணை இல்லம் மற்றும் அவனுடைய இல்லத்தில் அதிரடி சோதனை மற்றும் விசாரணையை நடத்தினர். அந்த விசாரணையில் திருநாவுக்கரசின் இல்லத்தில் இருந்த 10 அலைபேசிகள்., மெமரி கார்டுகள் மற்றும் பென் டிரைவுகள் கைபடப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பான விசாரணையானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.