மருத்துவராக மாறும் யாஷிகா ஆனந்த்…!

மருத்துவராக மாறும் யாஷிகா ஆனந்த்…!

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் யாஷிகா. இதைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் புவன் நல்லன் இயக்கத்தில் உருவாகும் ‘சாம்பி’ திரைப்படத்தில் நடிக்கிறார். யோகி பாபு, கோபி, சுதாகர் உள்ளிட்ட பலரும் இதில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த் மருத்துவராக நடிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படத்தின் தனது கெட்டப் இதுதான் என்று புகைப்படம் ஒன்றையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். யாஷிகா ஆனந்த்.  மேலும் இந்த திரைப்படத்தில் பிரேம் ஜி இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கிருஷ்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் கழுகு 2 படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு இவர் நடனமாடி இருக்கிறார், அந்த பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது  என்பது குறிப்பிட தக்கது.

    Source link

    Leave a Comment

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.