ரூ.5000க்கு ரெட்மி கோ மொபைல் டீசரை சியோமி வெளியிட்டது

ரூ.5000க்கு ரெட்மி கோ மொபைல் டீசரை சியோமி வெளியிட்டது

இந்தியாவின் முதன்மையான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி நிறுவனம், ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை பின்பற்றிய ரெட்மி கோ என்ற ஸ்மார்ட்போனை விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பியாவில் விற்பனைக்கு செய்யப்படுகின்ற இந்த ரெட்மி கோ போனின் விலை ரூ.6500 என விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், இந்திய சந்தையில் மிக குறைந்த விலை கொண்டதாக மார்ச் 19, 2019-ல் அதிகார்வப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கோ என்ற டீசரை சியோமி வெளியிட்டுள்ளது.

சியோமி ரெட்மி கோ சிறப்புகள்

முதல்முறையாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களை இலக்காக கொண்டு ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை பின்பற்றி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் சிறப்புகள் மற்ற நாடுகளில் கிடைக்கின்ற நுட்ப விபரங்களை மேற்கோளாக கொண்டு தொகுக்கப்படுள்ளது. ஆனால் அதிகார்வப்பூர்வமான விபரங்கள் மற்றும் விலை மார்ச் 19-ல் தெரிய வரும்.

Xiaomi Redmi Go smartphone

ரெட்மி கோ போனில் 5 அங்குல எல்சிடி டிஸ்பிளேவை பெற்று, 1280 x 720 பிக்சல்ஸ் தீர்மானத்துடன் 16:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டதாக அமைந்துள்ளது. குவால்காம் 1.4 GHz பிராசெஸருடன் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் பெற்று 1 ஜிபி ரேம் உடன் 8 ஜிபி உள்ளடக்க மெமரி பெற்று 128 ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை இணைத்துக் கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றிய ஆண்ட்ராய்டு கோ எடிசன் அடிப்படையில் செயல்படுகின்ற இந்த போனில் கேமரா சார்ந்த பிரிவில் f/2.0 துளை பெற்ற 8 மெகாபிக்சல்ஸ் பிரைமரி சென்சார் கேமரா மற்றும் முன்புற கேமரா 5 மெகாபிக்சல்ஸ் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள இடம்பெற்றிருக்கும்.

3000mAh பேட்டரி கொண்ட இந்த போனில் கூடுதல் விருப்பங்களாக டூயல் சிம் கார்டு வசதி, டூயல் 4ஜி சிம், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்,  Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.1, மைக்ரோ USB ஆகியவற்றை பெற்றிருக்கும்.

இந்தியாவில் மார்ச் 19-ல் வெளியிடப்பட உள்ள ரெட்மி கோ போன் விலை ரூ.5500 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

Xiaomi Redmi Go price in india

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.