13 நாடுகளிலிருந்து 10 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் கூட்டு போர் பயிற்சி மார்ச் 30-ல் இங்கிலாந்தில் தொடக்கம் | Tamil News patrikai | Tamil news online

13 நாடுகளிலிருந்து 10 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் கூட்டு போர் பயிற்சி மார்ச் 30-ல் இங்கிலாந்தில் தொடக்கம் | Tamil News patrikai | Tamil news online

லண்டன்:

13 நாடுகளிலிருந்து 10 ஆயிரம் படை வீரர்கள் பங்கேற்கும் மாபெரும் கூட்டு போர் பயிற்சி மார்ச் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.

இதற்காக, 13 நாடுகளிலிருந்து 10 ஆயிரம் ராணுவ வீரர்கள், 35 போர் கப்பல்கள், 5 நீர்முழ்கிக் கப்பல்கள், 59 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்த கூட்டுப் போர் பயிற்சியில் பங்கேற்கிறார்கள்.

இது குறித்து இங்கிலாந்து பாதுகாப்பு செயலர் காவின் வில்லியம்சன் கூறும்போது, “போர் சூழலை எதிர்கொள்ளும் வகையிலும், நேரடி அச்சுறுத்தலை இணைந்து எதிர்கொள்ளவும் இந்த பயிற்சி நேட்டோ நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதில் இங்கிலாந்து ராணுவம் பங்கெடுத்தாலும், உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.

பெல்ஜியம், கனடா,டென்மார்க், எஸ்தோனியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, லத்வியா, லிதுவேனியா, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த போர் பயிற்சியில் பங்கேற்கின்றன.  இந்த கூட்டு போர் பயிற்சி ஏப்ரல் 11-ம் தேதி நிறைவடையும்” என்றார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்

Tags: international military exercise, கூட்டு போர் பயிற்சி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.