கர்தார்பூர் சாலை திட்டம் பின்வாங்கியது பாகிஸ்தான்

கர்தார்பூர் சாலை திட்டம் பின்வாங்கியது பாகிஸ்தான்

புதுடில்லி:பஞ்சாப் மாநிலத்திலிருந்து பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் வரை சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து தற்போது பாகிஸ்தான் பின் வாங்கியுள்ளது.
பாகிஸ்தானின் கர்தார்பூரில் சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் தேவின் நினைவிடம் உள்ளது. இதற்கு சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்திலிருந்து சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. பாகிஸ்தானும் சம்மதித்தது.
இந்த சாலை தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த கொடுத்த வாக்குறுதிகளை பாக். இப்போது மறுத்துள்ளது.உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
‘கர்தார்பூருக்கு செல்லும் சீக்கியர்களுக்கு இலவச ‘விசா’ வழங்கப்படும்’ என பாகிஸ்தான் அறிவித்திருந்தது. ஆனால் இப்போது ‘கட்டணம் செலுத்தி சிறப்பு அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்’ என கூறுகிறது.’கர்தார்பூருக்கு அமைக்கப்படும் சாலையை வாரத்தில் ஏழு நாட்களும் திறந்து வைக்க வேண்டும்’ என இந்தியா கோரியது.
ஆனால் ‘குறிப்பிட்ட நாட்களில் மட்டும் திறந்துவைக்கப்படும்’ என பாகிஸ்தான் இப்போது கூறுகிறது.’யாத்ரீகர்கள் பாத யாத்திரையாக நடந்து செல்ல அனுமதிப்போம்’ என முன்பு தெரிவித்திருந்தது. இப்போது ‘குறைந்தது 15 பேர் அடங்கிய குழுவாகதான் செல்ல வேண்டும்; அதுவும் வாகனத்தில் தான் செல்ல வேண்டும்’ என கூறுகிறது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.