புத்தகங்களை மாணவர்களுக்கு  இலவசமாக வாரி வழங்க வரும் கல்வியாளர் லட்சுமண ராவ்

புத்தகங்களை மாணவர்களுக்கு இலவசமாக வாரி வழங்க வரும் கல்வியாளர் லட்சுமண ராவ்

டாக்டர் லட்சுமண ராவ், பிஎச்டி பட்டம் பெற்றவர். முன்னாள் துறைத் தலைவராக பொறுப்பில் இருந்தவர் கல்வித்துறையில் 40 ஆண்டு காலம் பழுத்த அனுபவம் மிக்கவர். பல்கலைக்கழகங்கள், நிர்வாகவியல் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள், ஐ. ஐ. எம். கல்வி நிறுவனங்கள், ஐஐடி மற்றும் கல்வித் துறை சார்ந்த பல்வேறு அமைப்புகளில் மாணவர்களுக்கு கல்வி அறிவூட்டி அவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளித்தவர். அதோடு, கருத்தரங்குகளையும் நடத்தி வந்திருப்பவர்.

இவரிடம் மிகவும் அரிதிலும் அரிதான விலைமதிப்பற்ற புத்தகங்கள் பெருமளவில் உள்ளன. திட்ட அறிக்கைகளும், ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஆய்வுக்கட்டுரைகளும் பெருமளவில் குவிந்து உள்ளன. இவற்றையெல்லாம் கல்வியில், ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள மாணவ – மாணவிகளுக்கும் நிர்வாகவியல் பயின்று வரும் மாணவ – மாணவிகளுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும், ஆலோசகர்களுக்கும் வழங்குவதென முடிவெடுத்திருக்கிறார்.

ஸ்டாடிட்டிக்கல், மெத்தட்ஸ், மார்க்கெட்டிங் – மார்க்கெட்டிங் ரிசர்ச் – சைக்காலஜி, எக்கனாமிக்ஸ், காஞ்சி குவான்டிடேட்டிவ் டெக்னிக்ஸ் சிக்ஸ் சிக்மா, மானேஜ்மெண்ட், கம்ப்யூட்டர் ஆகிய பல்வேறு தலைப்புகளில் பெரும் எண்ணிக்கையிலான புத்தகங்கள் இவருடைய கைவசம் உள்ளன.

மேலும் பிரபலங்கள் ஜே. கிருஷ்ணமூர்த்தி, சுதா நாராயணமூர்த்தி, ஆகும்பே நட்ராஜ் , ஜாக்ரன் ஆகிய அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்கள் எழுதியிருக்கும் நூல்களும் இவரிடம் உள்ளன. ஆர்வமுள்ள மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் இம்மாதம் 31ம் தேதிக்குள் அவரை தொடர்பு கொண்டு இந்த புத்தகங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

டாக்டர் லஷ்மண் ராவ்,கிருஷ்ணபுரி, சென்னை

[email protected], மொபைல் நம்பர்: 9381036989

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.