3 தொகுதிகளுக்கும் சேர்ந்தே இடைத்தேர்தல் நடைபெறுமா? உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது?…

3 தொகுதிகளுக்கும் சேர்ந்தே இடைத்தேர்தல் நடைபெறுமா? உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது?…

மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணைம் கடந்த மார்.10ஆம் தேதி ஞாயிறன்று அறிவித்தது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதால் அந்த 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என விளக்கம் அளித்தது.

இந்த விளக்கத்தை திமுக ஏற்க மறுத்த நிலையில், தமிழகத்தில் விடுப்பட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. திமுக தாக்கல்செய்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் வரும் வெள்ளிகிழமைக்குள் இந்த மனு விசாரிக்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக சார்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, அரசியல் காரணங்களுக்காக 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இல்லை.

தேர்தல் ஆணையம் நினைத்திருந்தால் இந்த மூன்று பகுதிகளுக்கும் மற்ற தொகுதிகளோடு, இடைத்தேர்தல் நடத்தியிருக்கலாம். எனவே இந்த மூன்று பகுதிகளுக்கும் உடனடியாக இடைத் தேர்தல் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், வரும் ஏப்ரல் 18ம் தேதி 18 தொகுதிகளுக்கும், பின்னர் அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்லை நடத்துவதில் என்ன பிரச்சனை? என்றும் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடும் படி எங்களை நிர்பந்திக்காதீர்கள் என்றும் தெரிவித்தனர்.

மேலும் தேர்தல் தொடர்பாக எந்த உத்தரவையும் உடனடியாக பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இவ்வழக்கில் மார்ச் 25-க்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.