ஏப்ரல் 24: 32எம்பி செல்பீ கேமராவுடன் ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஏப்ரல் 24: 32எம்பி செல்பீ கேமராவுடன் ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஏப்ரல் 24: 32எம்பி செல்பீ கேமராவுடன் ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

இந்தியாவில் சியோமி நிறுவனம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி அன்று ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 32எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவரும் என்பதால்
அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

32எம்பி செல்பீ கேமராவுடன் ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்புக்க அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். மேலும் டூயல்  ரியர் கேமரா, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி வ்யை3 :

ரெட்மி வ்யை3 :

ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடல் 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா

கேமரா

ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம்

8ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன்.

 பேட்டரி

பேட்டரி

ரெட்மி வ்யை3 சாதனத்தில் 3700எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.