சாம்பியன் ஆகுமா லீவர்பூல்? பிரீமியல் லீக் அப்டேட்

சாம்பியன் ஆகுமா லீவர்பூல்? பிரீமியல் லீக் அப்டேட்

Liverpool Back On Top As Mohamed Salah Stunner Kills Off Chelsea

மோ சாலா அட்டகாசமான கோல் அடித்தார் © AFP

பிரீமியர் லீக் கால்பந்து தொடர் தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. யார் இந்த ஆண்டின் இபிஎல் சாம்பியன் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

நேற்றைய போட்டியில் செல்ஸி அணியும் லீவர்பூல் அணிகளும் மோதின. மோ சாலாவின் அற்புதமான கோலால் லீவர்பூல் அணி 2-0 என கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது லீவர்பூல் அணி.

லீவர்பூல் அணிக்காக சாடியோ மானே மற்றும் மோ சாலா ஆகியோர் கோல் அடித்தனர். இந்த வெற்றி மூலம் முதல் இடத்திற்கு முன்னேறிய லீவர்பூல் அணி, இரண்டாம் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி அணிக்கும் இடையே இரண்டு புள்ளிகள் வித்தியாசம் உள்ளது.

இந்த சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு இன்னும் ஐந்து போட்டிகள் இருக்கிறது. லீவர்பூல் அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் உள்ளன. அதனால் இந்த சீசனின் சாம்பியனாக லீவர்பூல் அணிக்கும் மான்செஸ்டர் சிட்டி அணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இபிஎல் கோப்பையை லீவர்பூல் அணி வென்று 29 ஆண்டுகள் ஆகிறது. மோ சாலா இந்த சீசனில் அடிக்கும் 22 வது கோல் இதுவாகும்.

செல்ஸி அணியின் ஹசார்த்க்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தும் அதனை கோலாக மாற்ற முடியவில்லை. மான்செஸ்டர் சிட்டி அணி மான்செஸ்டர் யூனைடத், டோட்டன்ஹம் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளதால் பிரீமியர் லீக் கோப்பையை லீவர்பூல் அணி வெல்ல அதிக வாய்ப்புள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.