சேலம், திருவண்ணாமலை, செங்கத்தில் கருப்பு கொடியேற்றி விவசாயிகள் போராட்டம்

சேலம், திருவண்ணாமலை, செங்கத்தில் கருப்பு கொடியேற்றி விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை: 8 வழி பசுமைச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம், திருவண்ணாமலை, செங்கத்தில் கருப்பு கொடியேற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் நடந்த அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய, மத்திய நீர்வழி மற்றும் தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்ததுவிவசாயிகளிைடயே கொந்த ளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.  இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த சாலையனூர் கிராமத்தில் நேற்று  விவசாயிகள், விளை நிலத்தில் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது, மத்திய அமைச்சர் நிதின்கட்கரியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும், இத்திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர். இதேபோல், செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தில் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாய அமைப்பினர் நேற்று கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  எடப்பாடி மற்றும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இந்த தேர்தலில் பாஜ, அதிமுகவுக்கு எதிராக வாக்களிப்போம் என்று அவர்கள் சூளுரைத்தனர். சேலம்: சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த ராமலிங்கபுரத்தில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வீடுகளில் நேற்று காலை கருப்பு கொடி கட்டியும், விவசாயிகள் விளைநிலத்தில் மாடுகளுடன் கருப்பு கொடி ஏந்தியும் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.