தீயை வைத்ததே, திமுக தான்.!! சாதி மத கலவரம்!! திமுகவின் முகத்திரையை கிழித்த ஓபிஎஸ்!! 

தீயை வைத்ததே, திமுக தான்.!! சாதி மத கலவரம்!! திமுகவின் முகத்திரையை கிழித்த ஓபிஎஸ்!! 

திமுக மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதி முத்துவை ஆதரித்து, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். அப்பொழுது அவர், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்துக்கு நல்லாட்சி கொடுத்தவர். திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் என பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கின்றார்.

விவசாயத்தில் தமிழகம் தொடர்ந்து 4 ஆண்டுகள் முதல் இடத்தில் இருந்தது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்துக்கு 3 லட்சம் கோடி முதலீடு கிடைத்தது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பல நல்ல திட்டங்களின் மூலம் அதிமுக மக்களின் ஆதரவை பெற்று உள்ளது. இதனால், ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது. ஸ்டாலின் அவரது பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், நானும் தமிழகத்துக்கு தீ வைத்து விட்டோம் எனக் கூறுகிறார். ஆனால் வன்முறை செய்து மக்கள் மனதில் தீயை வைத்தது திமுக தான்.

சாதி கலவரம், மத கலவரம், தமிழகத்தில் மின்வெட்டு ஆகியவற்றை திமுக தான் செய்தது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமாக இருந்ததும் திமுக தான். தமிழர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து அந்தத் தடையை உடைத்து எறிந்தவர் பிரதமர் மோடி. மீண்டும் முதல்வரின் ஆட்சியே நீடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.