துளிகள்…

துளிகள்…

*சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், அங்கிதா ரெய்னா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 80-ஆவது இடத்தில் பிரஜ்னேஷும், 180-ஆவது இடத்தில் அங்கிதா ரெய்னாவும் உள்ளனர்.
*பந்தை சேதப்படுத்திய புகார் எதிரொலியாக தடை விதிக்கப்பட்ட அதிரடி வீரர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோர் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸி. அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். அணி விவரம்: ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் காஜா, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக் கரே, பேட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், ஹை ரிச்சர்ட்ஸன், நாதன் கூல்டர் நைல், ஜேசன் பெஹ்ரண்டர்ப், நாதன் லயன், ஆடம் ஸ்ம்பா.
*இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி பெற்றுள்ளன. செல்ஸியை 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூலும், கிறிஸ்டல் பேலûஸ 3-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியும் வென்றன.
*அகஸ்டாவில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கோல்ப் போட்டியில் 15-ஆவது பட்டம் வென்றார் பிரபல வீரர் டைகர் உட்ஸ். கடந்த ஓராண்டாக மீண்டும் கோல்ப் மைதானத்துக்கு திரும்பியுள்ள அவர் 15-ஆவது முறையாக மாஸ்டர்ஸ் பட்டம் வென்றார். 
*ஐபிஎல் போட்டியில் நாங்கள் அணியாக ஒருங்கிணைந்து ஆடுவதால் வெற்றி கிட்டி வருகிறது என தில்லி கேப்டன் ஷிரேயஸ் ஐயர் கூறியுள்ளார்.
*இந்திய தேசிய சீனியர் கால்பந்து அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிப்பது தொடர்பாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொழில்நுட்பக்குழு கூட்டம் திங்கள்கிழமை ஆலோசித்தது. 40 பேரின் விண்ணப்பங்கள் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன. இதில் முக்கியமாக எவ்வளவு ஊதியம் வழங்குவது குறித்து பிரச்னை எழுந்துள்ளது.
*நெதர்லாந்தின் வாட்டரின்ஜென்னில் திங்கள்கிழமை நடைபெற்ற டச்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் ஹர்ஷீல் டேனி சாம்பியன் பட்டம் வென்றார். 
 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.