நீரில் மூழ்கிய சிறுவர்கள்: அவர்களை தேடும் பொதுமக்கள்

நீரில் மூழ்கிய சிறுவர்கள்: அவர்களை தேடும் பொதுமக்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள கணியூர் பகுதியில் இன்று கிணற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கிய ஜீவானந்தம், சந்தோஷ் உள்ளிட்ட 3 பேரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தேடி வருகின்றனர்.

முன்னதாக, ஈரோடு மாவட்டம்  கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறையை கழிக்க மாணவர்கள் கடல், ஆறு, குட்டையில் குளிப்பதால் இதுபோன்று உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.