பூலோகத்திலிருந்து விண்வெளிக்குச் செல்லும் முதல் மிகப்பெரிய விமானத்தின் வைரல் வீடியோ.!

பூலோகத்திலிருந்து விண்வெளிக்குச் செல்லும் முதல் மிகப்பெரிய விமானத்தின் வைரல் வீடியோ.!

பூலோகத்திலிருந்து விண்வெளிக்குச் செல்லும் முதல் மிகப்பெரிய விமானத்தின் வைரல் வீடியோ.!

|

உலகின் மிகப் பெரிய விமானம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது. உலகின் மிகப் பெரிய முதல் விமானமான இந்த விமானத்திற்கு ஸ்ட்ராடோலான்ச்(Stratolaunch) விமானம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் உள்ள ரன்வேயில் தனது முதல் சோதனை ஓட்டத்தை சனிக்கிழமை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

இரண்டு விமானங்களை ஒன்றாக இணைத்து

இரண்டு விமானங்களை ஒன்றாக இணைத்து

இந்த பெரிய விமானம் இரண்டு ஃபுஸ்லேஜ்கள் மற்றும் ஆறு போயிங் 747 என்ஜின்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு விமானங்களை ஒன்றாக இணைத்தது போல் இதன் தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ராடோலான்ச் விமானத்தின் அளவு

ஸ்ட்ராடோலான்ச் விமானத்தின் அளவு

இந்த ஸ்ட்ராடோலான்ச் விமானம், அமெரிக்க கால்பந்து மைதானத்திற்கு இணையான நீலம் மற்றும் அகலத்தைக் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்பஸ் A380 விமானத்தை விட 1.5 மடங்கு பெரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

117 அடி நீளம்

117 அடி நீளம்

ஏர்பஸ் A380 விமானத்தின் விங் நீளம் 80 அடி இருக்கும், இந்த ஸ்ட்ராடோலான்ச் விமானத்தின் விங் நீளம் சுமார் 117 அடி நீளம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் நீளமான இந்த விமானத்தை ஸ்கேல்டு கம்போஸைட் நிறுவனம் உருவாகியுள்ளது.

17,000 அடி உயரம் பறந்த ஸ்ட்ராடோலான்ச்

17,000 அடி உயரம் பறந்த ஸ்ட்ராடோலான்ச்

சோதனை ஒட்டத்தின் போது ஸ்ட்ராடோலான்ச் விமானம் அதிகபட்சமாக 17,000 அடி உயரம் வரை பறந்துள்ளது. ஒரு மணி நேரத்தில் 302.4 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்துள்ளது.

செயற்கைக்கோள்களை ஏவும் ஸ்ட்ராடோலான்ச்

செயற்கைக்கோள்களை ஏவும் ஸ்ட்ராடோலான்ச்

விண்ணில் சிறு சிறு செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு இந்த விமானம் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் போல் செங்குத்தாக இல்லாமலா மிக எளிமையாக விண்ணுக்குச் சென்று செயற்கைக்கோள்களை ஏவும்படி மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலனால் 2011-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாகச் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.