விவசாயிகளுக்கு மொபைல் ஆப் தயாரித்த பற்றி மாணவர்கள்

விவசாயிகளுக்கு மொபைல் ஆப் தயாரித்த பற்றி மாணவர்கள்

நாடு முழுவதும்
தண்ணீர்
தட்டுப்பாடு பெருகிவரும் நிலையில் டெல்லி மற்றும் பெங்களூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்காத குடிநீர் சுத்திகரிப்பான் மற்றும் மொபைல் அப்ளிகேஷனைத் தயாரித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்
ஆர்யன் மெஹ்ரா
குறைந்த செலவிலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலும் தண்ணீரை சுத்திகரிக்கும் கருவியைக் உருவாக்கியுள்ளார். இதற்கு ‘Aqua Renew’ எனப் பெயர் வைத்துள்ளார். குடிக்கும் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி அறிந்ததும் இந்த வாட்டர் பியூரிபையரை (water purifier) தயாரிக்க விரும்பியுள்ளார்.

11ஆம் வகுப்பு மாணவரான ஆர்யன் டெல்லி பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியரிடம் தன் விருப்பத்தைக் கூறி ஆலோசனையைப் பெற்றுள்ளார். அதன்படியே இதனை வடிவமைத்திருப்பதாவும் கூறுகிறார்.

இரண்டு வாட்டர் பாட்டில்களை அடுக்கி அவற்றுக்கு இடையே மிஸ்லின் துணி, வடிகட்டும் காகிதம், மணல் போன்ற எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்து இதனை உருவாக்கியுள்ளார். இதைத் தயாரிக்க பெரிய செலவு ஏற்படாது என்பதால் ஏழை மக்கள் மாநகராட்சி குடிநீல் சுத்திகரித்துக் குடிக்கலாம் எனத் நம்புகிறார் ஆர்யன்.

விடுமுறை நாட்களில் டெல்லி மற்றும் ஹரியானாவில் உள்ள கிராமங்களுக்குச் சென்று இந்த குடிநீர் சுத்திகரிப்பானை செய்வது எப்படி என்றும் பயன்படுத்தும் முறை பற்றியும் செய்முறை விளக்கம் அளித்துவருகிறார்.

பெங்களூரில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்
கௌசிக் குனல் சிங்
, தன் கிராமத்தில் உள்ள பல விவசாயிகளின் தோட்டத்தில் இருந்த பப்பாளி மரங்கள் அடையாளம் தெரியாத நோயினால் நாசமானதிலிருத்து தன் திட்டத்தை கற்பனை செய்துள்ளார். கௌசிக்கின் தந்தைக்குச் சொந்தமான சிறிய தோட்டமும் இதே போல பாதிக்கப்பட்டிருந்தது.

இதற்குத் தீர்வு காண மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் பயிர்கள் மற்றும் தாவரங்களில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை கண்டுபிடிக்கலாம். இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். இதனை உருவாக்குவதில் வேளாண் மற்றும் தொழில்நுட்ப அறிஞர்களின் ஆலோசனையையும் கேட்டக்கொண்டிருக்கிறார்.

தற்போது சோதனைக் கட்டத்தில் உள்ள இந்த மொபைல் அப்ளிகேஷனில் இன்னும் பல பயிர்களின் நோய்களைக் கண்டுபிடிக்கும் அம்சத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் அப்போது இது விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் கௌசிக் கூறுகிறார்.

இந்த இரு மாணவர்களும் குர்கானில் நடந்த
Pramerica Spirit of Community Awards
விழாவில் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இந்த விருது விழாவில் இளம் மாணவர்கள் தங்கள் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரத்தைப் பெறுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.