அண்ணா அறிவாலயம் வருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

அண்ணா அறிவாலயம் வருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

Andhra CM Chandrababu Naidu Visits Anna Arivalayam : தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் வருகிறார்.  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான நாயுடுவின் உறவினர் ஒருவரின் திருமணம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. அதற்காக சென்னை வருகிறார் சந்திரபாபு நாயுடு.

தேர்தல் பரப்புரைக்காக முக ஸ்டாலின் தற்போது திருவாரூரில் இருப்பதால் திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோருடன் அரசியல் தொடர்பாக ஆலோசனையில் அவர் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

11ம் தேதி தான் ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு இருப்பதாக அவர் புகார் அளித்துள்ளார்.  இன்னும் இரண்டே நாட்களில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருப்பதால் இவரின் வருகை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் படிக்க : Election 2019: ரத்தாகிறதா வேலூர் மக்களவைத் தேர்தல்?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.