அதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் முடிவு!

அதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் முடிவு!

கும்பகோணம் (16 ஏப் 2019): பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்து அதிமுக மற்றும் பஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆடோ ஓட்டுநர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

கும்பகோணத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேன் ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் ரவி, ” பாஜக அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தபடி உள்ளன. எனவே இந்த தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.