இந்தியா ஒரு கொள்கை, ஒரு நோக்கம் கொண்ட நாடு அல்ல: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி பேச்சு | India is a policy, not a purpose country: Rahul Gandhi’s speech in the election campaign

இந்தியா ஒரு கொள்கை, ஒரு நோக்கம் கொண்ட நாடு அல்ல: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி பேச்சு | India is a policy, not a purpose country: Rahul Gandhi’s speech in the election campaign

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து கடந்த ஏப்ரல் 4ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று காலை கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர்; பொதுவாக நான் வட இந்தியாவின் அமேதி தொகுதியில் தேர்தலில் போட்டியிடுவேன். ஆனால் இந்த முறை தென்னிந்தியாவிற்கு முக்கிய தகவலை தர வேண்டும் என்பதற்காகவே கேரளாவிலும் போட்டியிட முடிவு செய்தேன். இந்தியா ஒரு கொள்கை, ஒரு நோக்கம் கொண்ட நாடு அல்ல. இந்தியா, லட்சக்கணக்கான மாறுபட்ட பார்வைகளையும், நோக்கங்களையும் கொண்டது. எங்களுக்கு அனைவரும் முக்கியம்.  

பிரதமர் மோடி, இந்தியாவில் காங்கிரஸின் எண்ணங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என கூறினார். இதற்கான பதிலாக காங்கிரஸ், மோடியிடம் என்ன கூறுகிறது என்றால், நாங்கள் உங்கள் எண்ணங்களுடன் ஒத்துப்போகவில்லை. உங்கள் தவறை சுட்டிக்காட்ட நிச்சயம் போராடுவோம். தேர்தலில் உங்களை தோற்கடிப்போம். ஆனால் உங்களுக்கு எதிராக எவ்வித வன்முறையிலும் ஈடுபடமாட்டோம் என அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.