இந்திய வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கிடைக்கும் ‘நோக்கியா’ எச்எம்டி குளோபல் அறிவிப்பு

கோவை, ஏப். 15

நோக்கியா தொலைபேசிகளின் தாயகமான எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 6.1 பிளஸ், நோக்கியா 2.1 மற்றும் நோக்கியா 1 ஆகியவை இனி இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

நோக்கியா 6.1 பிளஸ் இப்போது ஐஎன்ஆர் 16,999 எனும் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த விலையில் கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் இனி நோக்கியா 2.1ஐ ஐஎன்ஆர் 5,499 எனும் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த விலையிலும், நோக்கியா 1-ஐ ஐஎன்ஆர் 3,999 எனும் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த விலையிலும் வாங்கலாம்.

அனைத்து தொலைபேசிகளும் இந்தியாவின் முன்னணி மொபைல் ரீடெய்லர்களிடமும் Nokia.com/phones எனும் இணையதள முகவரியிலும் கிடைக்கும்.

நோக்கியா 6.1 பிளஸ், சமீபத்திய ஆண்ட்ராய்ட் 9 பைடிஎம் ஐ கொண்டுள்ளதால், பயனாளர்களுக்கு ஆப் ஆக்‌ஷன்ஸ் மற்றும் டிஜிட்டல் வெல்பீயிங் போன்ற கூகுளின் சமீபத்திய மற்றும் பிரத்தியேக அம்சங்களுங்கான அணுகலை வழங்குகின்றது.

சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட நோக்கியா 2.1 ஒரு பெரிய 5.5” எச்டி ஸ்கிரீன் மற்றும் டூயல் ப்ரண்ட் பேசிங் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மூலம் ஒரு நீடித்திருக்கும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகின்றது.

2 நாள் பேட்டரி நேரத்தை வழங்கும். இதன் மெட்டாலிக் நிறத்துடனான நேர்த்தியான வடிவமைப்பு, இதை தனித்துக் காட்டு கின்றது. நோக்கியா 2.1 சமீபத்திய ஆண்ட்ராய்ட் 9 பை இயங்கு தளத்தில் இயங்கு கிறது.

வார்ம் ரெட் மற்றும் டார்க் ப்ளூ ஆகிய நிறங்களில் கிடைக்கும் இந்த நோக்கியா 1க்கு பலவிதமான நிறங்களில் கிடைக்கும் எக்ஸ்பிரஸ் ஆன் கவர்கள் மூலம் அழகு சேர்க்கலாம்.

பைன்லேப்ஸ் டெர்மினல்கள் மூலம் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி, ஈஎம்ஐயில்,2019 ஏப்ரல் 5 முதல் 20ந் தேதிக்குள் நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 8.1 (6GB/128GB அல்லது 4GB/64GB), நோக்கியா 7.1 (4GB/64GB), நோக்கியா 6.1 பிளஸ் (6GB/64GB), நோக்கியா 5.1 பிளஸ் (6GB/64GB அல்லது 4GB/64GB) மற்றும் நோக்கியா 8110 ஆகியவற்றை வாங்கும் வாடிக்கையாளர்கள் 15% கேஷ்பேக்கை பெறுவார்கள். இந்த சலுகை இந்தியாவில் உள்ள முன்னணி மொபைல் ரீடெய்லர்களிடம் கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.