இன்றுடன் அடங்குகிறது அனல் பறந்த பிரச்சாரம்..!

இன்றுடன் அடங்குகிறது அனல் பறந்த பிரச்சாரம்..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி மற்றும் ஒரு சட்டசபை தொகுதிக்கும் எதிர்வரும் 18 ஆம் திகதி வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கு 781 ஆண்கள், 63 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 845 பேர் போட்டியிடுகின்றனர்.

அதுபோல், 18 சட்டசபை தொகுதிகளுக்கு 242 ஆண்கள், 27 பெண்கள் என மொத்தம் 269 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடந்த ஒரு மாதமாக தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அதுபோல், சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் அனைத்து வகையான தேர்தல் பிரச்சாரங்களும் நிறுத்தப்பட வேண்டும்.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (16 ஆம் திகதி ) மாலை 6 மணியுடன், பிரச்சாரம் நிறைவடைகிறது. நாளை மறுநாள் வியாழக்கிழமை (18 ஆம் திகதி) காலை, வாக்குப்பதிவு ஆரம்பமாகின்றது.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (16 ஆம் திகதி ) மாலை 6 மணியுடன், பிரச்சாரம் நிறைவடைகிறது. நாளை மறுநாள் வியாழக்கிழமை (18 ஆம் திகதி) காலை, வாக்குப்பதிவு ஆரம்பமாகி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கை இடம்பெற்று, எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.