உங்கள் சரும அழகை  மேம்படுத்த ஆசையா… இதோ அழகுக் குறிப்புகள்

உங்கள் சரும அழகை மேம்படுத்த ஆசையா… இதோ அழகுக் குறிப்புகள்

சுட
வைத்து ஆறவைத்த பால் அல்லதுக்ளன்சிங் மில்க்என்று கடைகளில் கிடைக்கும் பால் போன்ற திரவத்தை ஒரு பஞ்சில் நனைத்து, முகம், கழுத்து முதலிய பாகங்களில் தடவிக் கொள்ள வேண்டும். 3 அல்லது 5 நிமிடம் கழித்து வேறு ஒரு பஞ்சினால் முகம், கழுத்து ஆகிய பகுதிகளைத் துடைக்க வேண்டும். அவ்வாறு துடைத்தால் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். வாரம் இருமுறை இவ்வாறு செய்யலாம். வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

கீரை வகைகளுள் ஏதாவது ஒன்றைத் தினசரி சாப்பிடுவது சருமத்திற்கு நல்லது. இதுதவிர காரட், கோஸ், முள்ளங்கி, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை சாலட் போன்று சாப்பிட வேண்டும். தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிட வேண்டும். இதுதவிர தினமும் கொதித்து ஆறவைத்த நீர் எட்டு டம்ளர் முதல் பத்து டம்ளர் வரை குடிப்பதை வழக்கமாகச் கொள்ள வேண்டும். தினமும் இரவில் நிம்மதியான தூக்கம் அமையவேண்டியது மிகவும் முக்கியமாகும்.

முகத்தில் பரு கொண்டிருப்பவர்கள், முதலில் முகத்திற்கு ஆவி பிடித்து, அதிலிருக்கும் கெட்ட நீரை பஞ்சின் மூலம் வெளியேற்ற வேண்டும். அதன் பின்னர் பஞ்சைக் கொண்டு, ஆஸ்ட்ரிஜெண்ட் நனைத்து முகத்தைச் சுத்தம் செய்யலாம். இத்திரவத்தைப் பருக்களின் மேல் தடவினால் தொற்று ஏற்படாமலும், பருக்கள் பரவாமலும் தடுக்கும்.

குளித்துவிட்டு வந்த பிறகு, உடல் முழுவதும் பாடி லோஷன் உபயோகித்து உடல் முழுவதும் மசாஜ் செய்து கொள்ளலாம். முழங்கை, முழங்கால், பாதம் ஆகிய இவற்றின் சொர சொரப்பை இது நீக்கும். கை, கால் விரல்களுக்கு இதைக் கொண்டு மசாஜ் செய்தால் விரல்கள் சதைப்பிடிப்பாகவும் அழகாகவும் தோன்றும்.  குளித்து முடித்தபின் உடலை டவலால் துடைத்துவிட்டு, மாயிசரைசரை உடல், முகம், கை, கால்களில் இதைத் தடவிக் கொண்டால் சருமம் மிக மிக மென்மையாய் காணப்படும். வெடிப்புகளோடு உலர்ந்து காணப்படும் சருமத்திற்கு இது ஓர் அருமருந்து.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.