சர்கார் விழிப்புணர்வு எபெஃக்ட் – Dinakaran Cinema News

சர்கார் விழிப்புணர்வு எபெஃக்ட் – Dinakaran Cinema News

4/16/2019 3:27:54 PM

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க இயக்குனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ‘சர்கார்’. சென்ற ஆண்டு வெளியானது. கள்ள ஓட்டு போடுவதை எதிர்த்து மறுவாக்கு பதிவு செய்வதற்கான தேர்தல் கமிஷனின் 49P விதி இப்படத்தின் மூலம் பலருக்கு தெரிய வந்தது. வரும் 18ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையரின் டுவிட்டர் பக்கத்தில் 49P குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘உங்கள் வாக்கை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதனை நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் தெளிவுபடுத்தி, அவரின் கேள்விகளுக்கு தக்க பதிலளித்து, வாக்குச் சீட்டு மூலம் உங்கள் வாக்கை பதிவு செய்யலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையரின் டுவிட்டர் மெசேஜை பார்த்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதனை பெருமையோடு சுட்டிக்காட்டி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.