சவால்விட்ட லாரன்ஸிடம் சரணடைந்த சீமான்! அடேங்கப்பா என்ன ஒரு அந்தர் பல்டி!

சவால்விட்ட லாரன்ஸிடம் சரணடைந்த சீமான்! அடேங்கப்பா என்ன ஒரு அந்தர் பல்டி!

சமூக வலைத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களாக லாரன்ஸ் மற்றும் சீமானுக்கு இடையிலான கருத்து மோதல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முடிவுக்கட்டும் விதமாக நேற்று லாரன்ஸ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் சீமானின் பெயரை குறிப்பிடாமல் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு சீமான் தற்போது பதிலளித்துள்ளார்.

 

லாரன்ஸ் பதிவு:-
 
“வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை” என்று மறைமுகமாக கூறி,  உங்கள் தொண்டர்கள் சிலர், எனது சேவை தொடர்பான பதிவுகளில் மிகவும் கீழ்த்தரமாக, கொச்சையாக, அசிங்கமாக பதிவிட்டு வருவதோடு தன்னுடைய மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கும் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர். 
 
அதற்கெல்லாம் காரணம் முதன்முதலில் நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக விமர்சித்தது தான். அப்போதிலிருந்தே இந்த விவகாரம் நடந்து வருகிறது. இதை பிரச்னையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம் என நீங்கள் முடிவெடுத்தால் நான் அதற்கும் தயார். சமாதானமா? சவாலா? முடிவை நீங்களே எடுங்கள் என்று வம்பிழுத்த சீமானுக்கு மறைமுகமாக தக்க பதிலடி கொடுத்தார் லாரன்ஸ்.
 
இந்த நிலையில் தற்போது லாரன்ஸ்சின் இந்த கேள்விக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த சீமான், 

 

“லாரன்ஸ் மீதும் அவரின் சேவை மீதும் எப்போதும் எனக்கு மதிப்பு உண்டு.யாரேனும் புரிதல் இல்லாமல் விமர்சித்திருக்கலாம். எனது கட்சியை சேர்ந்தவர்கள் அவ்வாறு செய்திருந்தால் அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எனக்கும் என் கட்சிக்கும் கெட்டபெயர் உண்டாக்கும் நோக்கத்தில் பலர் சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளில் இயங்கி வருகின்றனர். அவர்களில் யாராவது கூட இப்படிச் செய்திருக்க வாய்ப்புள்ளது.  இருந்தாலும் இந்த சம்பவத்திற்கு தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சீமான் கூறினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.