தமிழகத்தில் மோடி ஆட்சிதான் நடக்கிறது: சந்திரபாபு நாயுடு

தமிழகத்தில் மோடி ஆட்சிதான் நடக்கிறது: சந்திரபாபு நாயுடு

தமிழகத்தில் மோடியின் ஆட்சிதான் நடக்கிறது என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

சென்னை வந்துள்ள சந்திரபாபு நாயுடு, அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பார்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘’தெலுங்கு, தமிழ் மக்கள் உறவு அண்ணன், தம்பி உறவு போன்றது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கவில்லை. மோடியின் ஆட்சிதான் நடக்கிறது. அதிமுகவுக்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது மோடிக்குத்தான் செல்லும். தமிழக விவசா யிகள் டெல்லியில் போராடியது போது மோடி, அவர்களை கண்டுகொண்டாரா? தமிழக விவசாயிகளின் போராட்டத்தை அவர் கண்டுகொள்ள வில்லை. திமுக தலைவர் கருணாநிதி சிறந்த தலைவர். அவரது மறைவுக்குப் பிறகு, அவர் மகன் மு.க.ஸ்டாலினை முதல்வராக பார்க்க, மக் கள் விரும்புகிறார்கள். ஆளும் அரசின் காரணமாக. ஜனநாயகம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. தமிழக வாக்களர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கவே சென்னை வந்துள்ளேன்.

உலகில் 10 சதவிகித நாடுகளே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றன. அதில் மோசடி நடக்கிறது. வாக்குப் பதிவுக்கு பின்னரும் அந்த இயந்திரங்களில் முறைகேடு நடக்கிறது. விவிபேட் கருவியில் ஒப்புகைச் சீட்டு பார்க்க 7 நொடிகள் இருந்த நேரத்தை 3 நொடிகளாக மாற்றியுள்ளனர்’’ என்றார் 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.