தயாரிப்பாளர் கே.ராஜன் பேசிய சர்ச்சை கருத்துக்கு சின்மயி காட்டமான பதில்….! | Tamil News patrikai | Tamil news online

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசிய சர்ச்சை கருத்துக்கு சின்மயி காட்டமான பதில்….! | Tamil News patrikai | Tamil news online


சமீபத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய மீடூ குற்றச்சாட்டுக்கள் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், 15 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக சொல்லும் விஷயத்தை இப்போது பேசவதன் நோக்கம் என்ன என பாடகி சின்மயியிடம் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். சீப் பப்ளிசிடிக்காக வைரமுத்து போன்ற பெருமைக்குரியவர்களை கெடுத்துவிடாதீர்கள் என பேசியுள்ளார்.

மேலும், எங்க ஏரியாபொண்ணுங்க 50 பேர் சேர்ந்தா உன்னை நாஸ்தி ஆக்கிடுவார்கள் என மிரட்டும் தொனியில் கே.ராஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் கே.ராஜன் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ள பாடகி சின்மயி, சிதைக்க ஆள் எல்லாம் வெச்சிருக்காராமே..? பயப்படனுமா? என காட்டாமாக தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்

Tags: Chinmayi, K Rajan, MeToo, vairamuthu

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.