தோள் கொடு தோழாவில் 2 ஹீரோயின்

தோள் கொடு தோழாவில் 2 ஹீரோயின்

தோள் கொடு தோழாவில் 2 ஹீரோயின் 16 ஏப், 2019 – 11:51 IST ரோஜா மாளிகை படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம், அடுத்ததாக தயாரிக்கும் படம் தோள் கொடு தோழா. கதாநாயகனாக ஜெய் ஆகாஷ், போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். மூன்று புதுமுகங்களாக ஹரி, ராகுல், பிரேம் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக மும்பையை சேர்ந்த அக்ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ நடிக்கிறார்கள். இவர்கள் தவிர நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ பீட்டர் இசை அமைக்கிறார். புதுமுக இயக்குனர் கவுதம் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்கிற நினைப்பில் எல்லோரும் படிக்கிறார்கள். எல்லோருக்கும் அரசாங்கத்தால் வேலை கொடுக்க முடியாது. அப்படி வேலை கிடைக்காதவர்கள் தவறான பாதைக்கு மாறி விடுகிறார்கள். அப்படி படித்த நான்கு மாணவர்களின் வாழ்க்கை பதிவு தான் தோள் கொடு தோழா. தன்னம்பிக்கை சிந்தனையை வளர்க்கும் விதமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.