பத்து வருடங்களுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்!

பத்து வருடங்களுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்!

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவானவர் விஜய் ஆண்டனி.

நான், சலீம், பிச்சைக்காரன் என இவரது படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

இவர் கடைசியாக ’திமிரு புடிச்சவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது ‘தமிழரசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை பாபு யோகேஸ்வரன் இயக்கி வருகிறார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா. இவரது இசையில் 1978-லிருந்து பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பாடி வருகிறார். இவர்கள் கூட்டணியில் அமைந்த ஒவ்வொரு பாடலும் தேனில் ஊற வைத்த ஜாமூனாய், அத்தனை இனிமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது.

கடந்த 2009-ல் ’பழஸிராஜா’ படத்திற்குப் பிறகு ராஜாவும் ஜேசுதாஸும் இணைந்து பணிபுரியவில்லை.

இந்நிலையில் 10 வருடம் கழித்து ‘தமிழரசன்’ படத்தில் இளையராஜாவின் இசையில் பாடியிருக்கிறார் ஜேசுதாஸ்!

இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் இருவரின் ரசிகர்களும்!

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.