பிரான்சின் 850 ஆண்டுகள் பழமையான தேவாலயம் தீக்கிரை

பிரான்சின் 850 ஆண்டுகள் பழமையான தேவாலயம் தீக்கிரை

பாரீஸ் : பிரான்ஸ் நாட்டின் முக்கிய சுற்றுலா தளமான நோட்ரிடேம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணியர் பாரீசின் மத்திய பகுதியில் உள்ள புகழ்பெற்ற நோட்ரிடேம் கத்தீட்ரல் தேவாலயத்திற்கு செல்வது வழக்கம் ..சுற்றுலா பயணிகளை ஈர்த்து வந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த தேவாலயம் 850 ஆண்டுகள் பழமையானது.

பாரீஸ் நகரின் அடையாள சின்னமாக விளங்கும் இந்த தேவாலயத்தின் மேற்கூரையில் நேற்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அப்பகுதி முழுவதும் தீக்கிரையாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேவாலயம் தீக்கிரையானதால் பிரான்ஸ் அரசு கவலையடைந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.